10 மாத குழந்தையின் தலையில் துப்பாக்கிச்சூடு! தாய், இச்சைக்கு இணங்க மறுத்ததால் கொடூரம்!

தன்னுடைய காம இச்சைக்கு அடங்காத பெண்ணின் 10 மாத குழந்தையை சுட்டுக்கொன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ப்ரெஸ்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 18 வயது மதிக்கத்தக்க டெஸ்ரி என்ற பெண் தன் 10 மாத குழந்தையுடன் வசித்து வருகிறார்.  இவர் பிறந்தநாள் விழா ஒன்றிற்கு தன் குழந்தையுடன் சென்றார்.

அங்கு ஆண்டோனியோ என்றவர் இவரிடம் தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்த டெஸ்ரி தன்னுடைய காரினுள் தஞ்சம் புகுந்தார். ஆண்டோனியோ டெஸ்ரியை உல்லாசத்திற்காக நிர்பந்தித்துள்ளார். டெஸ்ரியை சல்லடை போட்டு தேடினார் ஆண்டோனியோ.

இந்நிலையில், டெஸ்ரி காருக்கு அருகில் சென்ற ஆண்டோனியோ காரை நோக்கி சுட்டுள்ளார். கண்ணாடியை பிளந்த குண்டுகளுள் ஒன்று குழந்தையின் தலையை தாக்கியது. பின்னர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர், குழந்தை தலையில் இருந்த குண்டு வெளியே எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் அறிந்த கலிபோர்னியா மாகாண காவல்துறையினர் ஆண்டோனியோவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.