ஒத்தைக்கு ஒத்தை வாடா..! சட்டையை கழட்டி போலீசை சண்டைக்கு அழைத்த இளைஞன்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

மதுபோதையில் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் பவானி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு மது போதையில் பிரகாஷ் என்பவர் பணியாற்றி கொண்டிருந்த பெண் போக்குவரத்து காவலரை கிண்டல் செய்துள்ளார். அப்போது அந்தப் பெண் காவலர் தன்னுடன் பணியாற்றும் போக்குவரத்து காவலரிடம் இதுபற்றி கூறியுள்ளார.

உடனடியாக அவர் நடந்து சென்று கொண்டிருந்த பிரகாஷ் விசாரணைக்கு வருமாறு அழைத்தார். உடனே பிரகாஷ் நடந்து சென்று கொண்டிருக்கும் தன்னிடமே விசாரணையா என்று அந்த காவல்துறை அதிகாரியை ஆபாசமாக திட்டி வந்துள்ளார். இவருடைய ஆபாசத்தை கேட்க சகிக்காமல் அப்பகுதி வழியே பொதுமக்கள் வருவதை நிறுத்தி கொண்டனர்.

இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து கொண்டிருந்த மற்றொரு காவல்துறை அதிகாரியையும் வாய்க்கு வந்தபடி பிரகாஷ் போதையில் ஆபாசமாக பேசியுள்ளார். அக்கம்பக்கத்தினர் பிரகாஷ் கட்டுப்படுத்த முயன்றும் அவர்களால் இயலவில்லை. 

உடனடியாக சட்ட ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களை கண்டவுடன் பிரகாஷ் ஓடி பவானி ஆற்றின் நடுவில் நின்று கொண்டு, அவர்களையும் ஆபாசமாக திட்டியுள்ளான். போதையில் மூழ்கி விடுவாரோ என்ற அச்சத்தில் காவல்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அதன் பின்னர் போதை தெளிந்தவுடன் பிரகாஷ் கையும் களவுமாக காவல்துறையினரிடம் சிக்கிகொண்டார். போதையில் தன்நிலை மறந்து இவ்வாறு செய்ததாக காவல்துறையினரிடம் பிரகாஷ் மன்றாடியுள்ளார். காவல்துறையினர் பிரகாஷ் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் கால்களிலும் விழவைத்து தண்டனை கொடுத்தனர். 

பின்னர் சிறப்பு கவனிப்புடன் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.