நண்பனின் மூன்றரை வயது பெண் குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபர்..! பதற வைக்கும் காரணம்! நாகூர் அதிர்ச்சி!

நண்பரின் குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு வேறு ஒருவருக்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் என்ற பகுதிக்கு அருகே கோசா மரைக்காயர் என்ற தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி. இவரது மனைவியின் பெயர் நிர்மலா பேகம். இந்த தம்பதியினருக்கு மூன்றறை வயதில் மும்தாஜ் என்ற மகளும் ஒன்றரை வயதில் ராஜா உசேன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஷ்ரப் அலியின் மனைவி நிர்மலா பேகம் குழந்தைகளை கணவர் இடத்தில் விட்டுவிட்டு தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் தனியாளாக இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்த அஷ்ரப் அலி தனது நண்பரான ஆட்டோ ஓட்டுனர் அசைன் முகமதுவிடம் தனது 3 வயது பெண் குழந்தையை முஸ்லிம் குழந்தைகளை பாதுகாக்கும் மதர்சாவில் சேர்க்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதன் மூலம் அசைன் முகமது குழந்தையை மதர்ஸாவில் சேர்ப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், குழந்தையை படிக்க வைக்கவும் உதவி செய்வதாக கூறி அஷ்ரப் அலியின் குழந்தையை கோவில்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். 

குழந்தையை பார்க்க அழைத்துச் செல்லுமாறு குழந்தையின் தந்தை அஷ்ரப் அலி தனது நண்பர் அசைன் முகமது இடம் பலமுறை கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் உசைன் முகமது ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து வந்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு ரம்ஜான் அன்று அஷ்ரப் அலி தனது குழந்தையை இன்று நான் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து  குழந்தை மதுரை நெல் பேட்டையில் உள்ள மதர்சாவில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தனது குழந்தையை பார்க்க தனது ஒன்றரை வயது மகனை தூக்கிக்கொண்டு அஷ்ரப் அலி நாகூரில் இருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் தனக்கு தெரிந்தவரிடம் உதவி கேட்டதன் மூலமாக அவர்கள் அஷ்ரப் அலியையும் குழந்தையையும் மதுரையில் காரில் இறக்கி விட்டுள்ளனர். குழந்தை இருப்பதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது குழந்தை அங்கு இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் பதறிய அஷ்ரப் அலி தனது நண்பர் அசைன் முகமது க்கு போன் செய்து பேசியுள்ளார். அதற்கு அவர் குழந்தையை ஏற்கனவே விற்று விட்டதாகவும், குழந்தை தற்போது எங்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் குழந்தையை பற்றி கேட்டு தொந்தரவு செய்தால் போலீசிடம் புகார் அளித்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் பயமுறுத்தி உள்ளார்.

இதனால் பதறிப்போன அஷ்ரப் அலி மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் நடந்த விஷயங்களையெல்லாம் கூறியுள்ளார். பின்னர் ஆட்சியர் காவல்துறையினருக்கு குழந்தையை மீட்க உத்தரவிட்டார். இதன் காரணமாக காவல்துறையினர் அசைன் முகம்மதுக்கு போன் செய்து குழந்தை இருக்கும் இடத்தைக் கேட்டு விசாரித்துள்ளனர். இதனால் பயந்து அசைன் முகமது குழந்தை கோவில்பட்டியில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் காவல்துறையினர் கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் கோவில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டு வீடியோ கால் மூலமாக அவரது தந்தையிடம் பேச வைத்துள்ளனர். 

பின்னர் குழந்தையை கோவில்பட்டியில் இருந்து மீட்டு நாகப்பட்டினத்தில் உள்ள குழந்தைகள் முகாமிற்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியரே செய்தார். குழந்தையை பற்றி புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் காவல்துறை உதவியுடன் குழந்தையை மீட்டு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.