காதலியின் 10 மாத குழந்தையை பைக்குள் அடைத்து கார் டிக்கிக்குள் வைத்துச் சென்ற காதலன்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

சாக்குப்பையில் அடைத்து குழந்தையை காரில் விட்டுச்சென்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


அமெரிக்கா நாட்டின் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர் டிரெவர். இவருடைய வயது 27. இவர் தன் காதலியுடன் "லிவிங்டுகெதர் ரிலேஷன்ஷிப்" வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 10 மாதங்கள் நிறைவடைந்தன.

அலுவலகத்திற்கு காரில் வந்ததும் தன்னுடைய குழந்தையை முதுகு பைக்குள் அடைத்து காரின் பின்னால் விட்டு சென்றுள்ளார். சிற்றுண்டியின் போது வந்து காரில் பார்த்தபோது, குழந்தை பையை விட்டு வெளியே இருந்தது.  

மீண்டும் குழந்தையை பையில் அடைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். உணவு இடைவேளையில் வந்து பையை திறந்து பார்த்தபோது குழந்தை அழுது கொண்டிருந்தது. மீண்டும் தனது குழந்தையை பைக்குள் அடைத்துவிட்டு டிரெவர் சென்றுள்ளார்‌.

வேலை முடிந்த மாலை நேரத்தில் காருக்கு வந்து பையை திறந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்தது. உடனடியாக அவர் 911 ஆம்புலன்சை அழைத்துள்ளார்.  விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துகிடந்தது.

இந்த சம்பவத்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிரெவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.