போலி டாக்டர்கள்! தமிழகத்தில் வட மாநிலத்தவர்களின் புதிய பிசினஸ்!

மருத்துவம், வக்கீல் ஆகிய தொழில்கள் ஒரு காலத்தில் சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன. ஆனால் காலப்போக்கில் பிற தொழில்களை போன்று சிலர் வியாபார நோக்குடன் ஈடுபடுவது மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நகராட்சியாக  ஆரணி விளங்குகிறது. ஆரணியில் மருத்துவ படிப்பை சரிவர முடிக்காமல் மருத்துவ தொழிலை மருத்துவர் ஒருவர் பார்த்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.

ஆரணியில் கள்ளமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள CC சாலையில் உஷா கிளினிக் உள்ளது. கடந்த 10 வருடங்களாக இங்கு கிளினிக்கை தோற்றுவித்தவரே மருத்துவமளித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் இவர் ராஜேஷ்குமார் பிஸ்வால் என்பவருக்கு மூலநோய் ஆபரேஷன் செய்தார். இவருக்கு வயது 21. ஆபரேஷனை அந்த மருத்துவர் தவறுதலாக செய்துள்ளார். இந்நிலையில் சந்தேகித்த அந்த இளைஞன், குடும்பத்தாருடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. 

அதாவது அந்த மருத்துவர், முறையாக மருத்துவம் பயிலவில்லை என்பதும் போலி சான்றிதழ் வைத்து 10 ஆண்டுகள் மருத்துவர் பயின்று வந்ததாகவும் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையே வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் சிலர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் டாக்டர்களாகவும் தங்கள் பிசினஸை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.