அடிக்குற வெயிலுக்கு தேடி வந்த16 அடி நீள ராஜ நாகம்..! குடம் குடமாக தண்ணீர் ஊற்றி உச்சி குளிர வைத்த இளைஞன்! பதைபதைக்க வைக்கும் வீடியோ உள்ளே!

இளைஞர் ஒருவர் 16 அடி நீள ராஜ நாகம் பாம்பிற்கு குடம் குடமாக தண்ணீர் ஊற்றி அதனை குளிர வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி காண்போரின் நெஞ்சங்களை பதைபதைக்க வைத்துள்ளது.


பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பர். அதிலும் குறிப்பாக பாம்பு களிலேயே ராஜநாகம் தான் மிகக் கொடிய விஷத்தை கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இப்படி இருக்க இளைஞரொருவர் மிகக் கொடிய விஷத்தைக் கொண்ட ராஜ நாகத்திற்கு குடம் குடமாக நீரை ஊற்றி கோடையின் வெப்பத்தை தணிக்க வைத்திருக்கிறார். மேலும் அவர் 16 அடி நீள ராஜநாகத்தை குளிக்க வைக்கும் வீடியோவை எடுத்திருக்கிறார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் தற்போது டிரென்ட் ஆகியுள்ளது.

அந்த வீடியோ பதிவில் இளைஞர் ஒருவர் அந்த ராஜ நாகத்திற்கு தன் வீட்டு குழாயில் இருந்து தண்ணீரைப் பிடித்து அதன் தலை மீது ஊற்றிக் குளிக்க வைக்கிறார். பின்னர் அதனை மெதுவாக தடவிக் கொடுத்து கொஞ்சுகிறார் அந்த இளைஞர். அடுத்து மேலும் ஒரு பக்கெட் நிறைய நீரை பிடித்து வந்து இரண்டாவது முறையாகவும் அந்தப் பாம்பினை குளிக்க வைக்கிறார். இந்த சம்பவத்தின் போது அந்த ராஜநாகம் பொறுமையாக குழந்தையாக மாறி அந்த இளைஞரிடம் தன் அன்பை பரிமாறிக் கொண்டதை நம்மால் பார்க்க இயலும். 

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய பதிவை இராணுவ அதிகாரி சுசாந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் உடன் பகிர்ந்திருக்கிறார். மேலும் அதற்கு கேப்ஷனாக, கோடை வெயிலில் குளிக்க யாருக்குத்தான் பிடிக்காது.. தயவுசெய்து இதை யாரும் வீட்டில் முயற்சி செய்யாதீர்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தற்போது இந்த ராஜநாகத்தை குளிக்க வைக்கும் வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.