படுக்கைக்கு அடியில் துர்நாற்றம்! திறந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்த குழந்தைகள்! பதற வைக்கும் சம்பவம்!

மனைவியை கொலை செய்துவிட்டு படுக்கையறை மெத்தையின் அடியிலே மறைத்து வைத்திருந்த சம்பவமானது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜசர்கேடி என்ற இடத்தில் வசித்து வந்த ராஜ்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு நிஷாந்த் என்ற மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் லலிதா குருகிராம் பகுதியில் தனியாக வாழ்ந்து வருகிறார். ராஜ்வீர் தன்னுடைய வீட்டிலேயே 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

நிஷாந்தின் பிறந்தநாளான நவம்பர் 22-ஆம் தேதியன்று லலிதா ராஜ்வீரின் வீட்டிற்கு வந்துள்ளார். அன்றும் கணவன் மனைவி இடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது குழந்தைகள் தங்களுடைய அத்தையின் வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆத்திரம் தலைக்கேறி ராஜ்வீர் லலிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். பின்னர் லலிதாவின் சடலத்தை படுக்கையறையின் மெத்தைக்கு அடியிலேயே மறைத்து வைத்துவிட்டார். 

இது தெரியாமல் குழந்தைகள் அந்த மெத்தையில் இரவுநேரங்களில் தூங்கி கொண்டிருந்தன. இதையடுத்து ராஜ்வீரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறி, அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், ராஜ்வீரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது படுக்கை அறையிலே லலிதாவின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  உடனடியாக ராஜ்வீரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கொலை செய்ததை ராஜ்வீர் ஒப்புக்கொண்டார்.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.