பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் கேட்டு கொடுக்கமாட்றியா? வீட்டில் தனிமையில் இருந்து சித்திக்கு இளைஞனால் ஏற்பட்ட விபரீதம்! தூத்துக்குடி பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட நடராஜபுரம் என்னும் பகுதியில் 9-வது தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய முதல் மனைவியின் பெயர் மகேஸ்வரி. இத்தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற 24 வயது மகனும் கவிதா என்ற 26 வயது மகளும் உள்ளனர். இதில் கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
மகேஸ்வரி 17 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இதையடுத்து மகேஸ்வரியின் தங்கையான கோகிலாவை பாண்டி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதியினருக்கு மகேந்திரன் என்ற 15 வயது மகன் உள்ளான். இதனிடையே பாண்டி 6 வருடங்களுக்கு முன்னர் இறந்து போனார். இறப்பதற்கு முன்பாக ரேஷன் கடையில் வேலை பார்த்தற்காக ஓய்வு பணம் 2 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். இந்த பணத்தை சரிவர பகிர்ந்து கொள்வதில் மகேஸ்வரியின் மகனான மணிகண்டன் மற்றும் சித்தியான கோகிலாவுக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் மகேந்திரன் பள்ளியில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். வீடு திரும்பியவுடன், கோகிலா இரும்பு கம்பியால் அடிக்கப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பல குற்ற செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள மணிகண்டன் ஏன் இந்த கொலையை செய்திருக்கக் கூடாது என்ற வியூகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.