ஒரே நேரத்தில் 2 லட்டுகள்..! 2 காதலிகளை ஒரே நேரத்தில் மனைவியாக்கிய அதிஷ்டக்கார இளைஞன்! எப்படி தெரியுமா?

2 காதலிகளுக்கு இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் தாலி கட்டியுள்ள சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளைஞரொருவர் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணும் இவர் மீது உயிரோடு உயிராக இருந்துள்ளார். இதனிடையே இளைஞர் வேறொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

ஒரே சமயத்தில் 2 பெண்களையும் அவர் காதலித்து வந்துள்ளார். இருவரையும் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார். 2 பெண்களுக்கும் இளைஞர் தங்களை ஏமாற்றுவது தெரியவரவில்லை.  

சில நாட்களுக்கு முன்னர் அந்த இளைஞர், தன்னை தவிர மற்றொரு பெண்ணையும் விரும்பி வருவதை 2 பெண்களும் கண்டுபிடித்துள்ளனர். இருவரும் அந்த இளைஞரிடம் நேராக சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் இருவருக்கும் அந்த இளைஞரை விட்டு பிரிவதில் எந்தவித உடன்பாடும் இல்லை.

இதனால் அந்த இளைஞர் செய்வதறியாது திகைத்து போனார். இருவரிடமும் சமரசம் பேசி, சமாதானம் செய்தார். இருவரையும் ஒரே திருமண மேடையில் செய்துகொள்ள முடிவெடுத்தார்.

அதன்படி திருமண நாளை முடிவு செய்து, ஒரே மேடையில் 2 பெண்களையும் மணந்துள்ளார். ஆனால் இதற்கு 3 பேரின் வீட்டாரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கை நடத்துவது என்பது தெரியாமல் 3 பேரும் நடுத்தெருவில் ஆதரவின்றி கிடக்கின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.