மனைவியின் அடங்கா ஆசை..! நிறைவேற்ற முடியாமல் உயிரை விட்ட கணவன்! திருச்சி பகீர் சம்பவம்!

திருச்சியை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தன்னுடைய மனைவி விரும்பும் ஆடம்பர வாழ்க்கையை பெற்று தர முடியாததால் அவமானப்படுத்தபட்ட அவர் பரிதாபமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


திருச்சி மாவட்டம் அரிய மங்கலம் பகுதியில் காமராஜ் நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சொந்தமாக மிட்டாய் கடை நடத்தி வருபவர் பிரபு. இவருக்கு வயது 27. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வசித்து வரும் தாமினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 மாதம் ஆண் குழந்தை உள்ளது. பிரபு மிட்டாய் கடை நடத்தி வருவதால் தன் மனைவி கேட்கும் ஆடம்பர பொருட்களை வாங்கி தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர பிரபு எவ்வளவோ முயன்றும் அது அவருக்கு பலன் தரவில்லை. இருப்பினும் பிரபு மீண்டும் கடந்த 21ம் தேதி தன்னுடைய மனைவியின் தாயார் வீட்டிற்கு சென்று அவரை சமாதானப்படுத்தி தன் மனைவியையும் குழந்தையும் வீட்டுக்கு அழைத்து வரலாம் என்று கிளம்பி சென்று இருக்கிறார். அப்படியாக சென்ற அவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியுள்ளது. இதனையடுத்து பிரபு தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னுடைய வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

உடனே பிரபு தற்கொலைக்கு முயன்றதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பிரபுவை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபு நேற்றைய இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரிய மங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கினை பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது பிரபு தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன்பாக மூன்று பக்கங்களில் கடிதம் ஒன்றை எழுதி இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். 

பிரபு எழுதியுள்ள அந்த கடிதத்தில், நான் மிட்டாய் கடை வைத்து நடத்தி வருகிறேன். ஆகையால் ஆடம்பர பொருட்களுக்காக ஆசைப்பட்ட என் மனைவிக்கு தேவையானதை என்னால் பெற்றுத்தர இயலவில்லை. இதனால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். நான் பலமுறை சமாதானப்படுத்த முயன்றும் அவர் என்னுடன் வர மறுத்து விட்டார் ‌. 21ஆம் தேதி நான் என் மனைவியை பார்த்து சமாதானம் பேசி குழந்தையையும் அவரையும் அழைத்து வர முற்பட்டேன். அப்போது என் மனைவியின் அத்தை சந்திரா, தான் அரசு அதிகாரி என்று கூறி 10 பேரை அழைத்து வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறி என்னை மிரட்டினார்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய இரு சக்கர வாகனத்தையும் சாவியையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டு என்னை அவமானப்படுத்தினார்கள். இதனால் மன வேதனை தாங்க முடியாமல் நான் இந்த முயற்சியை கையில் எடுக்கிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறார். பிரபு எழுதிய அந்த தற்கொலை கடிதத்தின் முடிவில், அப்பாவி ஆண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு இது சமர்ப்பணம் என்று குறிப்பிட்டிருக்கிறார் இருக்கிறார். இதனை பார்த்த காவல் அதிகாரிகள், உடனடியாக பிரபுவின் மனைவி, மாமனார் கருணாநிதி, அத்தை சந்திரா, உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.