கடனுக்கு வட்டியாக மனைவி..! கவுன்சிலரிடம் இழக்க கூடாததை இழந்த கணவன்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

கந்துவட்டி கொடுமையால் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூரை சேர்ந்தவர் சரத்குமார். இவர் சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து மஞ்சுளா என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரத்குமார் அருகிலிருந்த இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். குடும்ப கஷ்டத்தின் காரணமாக கந்துவட்டி பாபுவிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் வாங்கிய கடனை சரியாக திருப்பித் தர முடியாததால் கடன் அளித்த அந்த பகுதி கவுன்சிலர் பாபு வீடு தேடி வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

அடிக்கடி வட்டி பணத்தை பெறுவதற்காக சரத் குமாரின் வீட்டிற்கு கவுன்சிலர் பாபு வந்த பொழுது, மஞ்சுளாவிற்கும் பாபுவிற்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுக்கு இடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி பாபுவின் மனைவி கிரிஜா, சரத்குமாரிடம் தகவல் அளித்திருக்கிறார். அதாவது என் புருஷனும் உன் பொண்டாட்டி மஞ்சுளாவும் காதலிச்சு வராங்க .. சீக்கிரமா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க என்று கிரிஜா, மஞ்சுளாவின் கணவர் சரத்குமாரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட சரத்குமார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

உடனே இதைப் பற்றி அவரது மனைவி மஞ்சுளாவிடம் பேசியிருக்கிறார். மேலும் அவரை கண்டித்த பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே மஞ்சுளா தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தூக்கி கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டில் தனிமையில் இருந்து வந்த சரத்குமார் செய்வதறியாது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தன் செல்போனில் சில வீடியோக்களை மரண வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார்.

அந்த வீடியோவில், என் பெயர் சரத்குமார்.. நான் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறேன். நான் குடும்ப கஷ்டத்தின் காரணமாக கந்துவட்டி பாபுவிடம் கடன் வாங்கினேன். பொதுவாகவே பாபு கடன் கொடுப்பதற்கு முன் கடன் பெறுபவர்களின் மனைவியின் செல்போன் எண்ணை பெறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடன் வாங்குபவர்களின் மனைவி பாபுவை மாமா என்றுதான் அழைக்கவேண்டும் எனவும் அந்த வீடியோ பதிவில் சரத்குமார் கூறியிருக்கிறார். அப்படித்தான் என் மனைவி மஞ்சுளாவும் பாபுவை மாமா என்று அழைத்தாள். கடன் காசை திரும்ப பெற கவுன்சிலர் பாபு அடிக்கடி வீட்டிற்கு வரும்பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைப்பற்றி நான் எவ்வளவோ சொல்லியும் என் மனைவி என் பேச்சை கேட்கவில்லை. அந்த பாபு தான் காசு வாங்குவதற்காக என் வீட்டிற்கு வந்து என் குடும்பத்தையே நாசம் பண்ணிட்டான் என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ பதிவை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சரத்குமார் கூறிய இந்த தகவல்கள் உண்மையானதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.