நான் கர்ப்பமாக இருக்கிறேன்..! 21 வயது ராஜபாண்டியை அதிர வைத்த 18 வயது நிரம்பாத சிறுமி! வத்தலகுண்டு பகீர்!

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது வத்தலகுண்டுவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வத்தலகுண்டு அருகே அவையம்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. அங்க ராஜபாண்டி என்ற 21 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

பின்னர் அந்த சிறுமியிடம் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியை நம்ப வைத்து அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி திடீரென்று கர்ப்பமாகியுள்ளார்.சிறுநீர் கர்ப்பமானதை தெரிந்தவுடன் ராஜபாண்டி அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துள்ளார்.

சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி ராஜபாண்டியிடம் தான் ஏமாந்ததை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக பெற்றோர் நிலக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.