13 வீடுகள்! ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்! ராஜா போல் இருந்த தந்தை மகனால் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்! ஆனால்?

பல கோடிகள் மதிப்பிலான சொத்துக்களை சுரண்டிவிட்டு தந்தையையும், தம்பியையும் இளைஞர் ஒருவர் அநாதையாக விட்டு சம்பவமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிம்சன்ராஜ். இவருடைய வயது 75. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த பிள்ளைகள் திருமணமாகி தனியாக குடித்தனம் சென்றுவிட்டார். 

சிம்சன்ராஜ் தன்னுடைய இளைய மகன்களான விக்டர் ஞானராஜ் மற்றும் வால்டர் செல்வராஜுடன். விக்டர் ஞானராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.  சிம்சன்ராஜுக்கு சொந்தமாக 13 வீடுகளும், சில கடைகளும் உள்ளன. அவற்றின் முழு மதிப்பானது கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயாகும். இந்நிலையில் அத்தனை பணத்தையும் சுருட்டி கொண்ட வால்டர் செல்வராஜ், தந்தையையும் தம்பியையும் அனாதையாக்கி விட்டார். 

தற்போது இருவரும் சாலையோரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி வால்டர் செல்வராஜ் இருவருக்கும் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கும் வால்டர் செல்வராஜ் சம்மதிக்கவில்லை.

இதனிடையே வால்டர் செல்வராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் வால்டர் செல்வராஜ் மற்றும் அவருடைய மனைவி தலைமறைவாகியுள்ளனர். இந்த சம்பவமானது தண்டையார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.