நேரலையில் கன்னத்தில் இளைஞனின் முரட்டு முத்தம்..! டிவி தொகுப்பாளினி பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ உள்ளே!

நேரலையில் தொகுப்பாளினிக்கு நபரொருவர் முத்தம் கொடுத்திருக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


க்ஷலெபனான் நாட்டில் ஊழல் மற்றும் பொறுப்பற்ற நிர்வாக முறையை கண்டித்து அந்நாட்டு மக்கள் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார மந்த நிலை மக்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும், அதனை சரி செய்ய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் போராடி வருகின்றனர்.  

லெபனான் நாட்டில் நிலவிவரும் சூழலுக்கு பொறுப்பேற்று அந்நாட்டின் பிரதமர் சாத் அல் ஹரிரி அக்டோபர் மாதம் 29-ஆம் தேதியன்று பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த போராட்டத்தை அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளினியான டேரின் எல் ஹெல்வ் நேரலையில் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று வந்து அவருடைய கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இந்த சம்பவமானது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொகுப்பாளினி கூறுகையில், "நான் நேரலையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த போதும் அந்த நபர் எனக்கு முத்தமிட்டார். மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்றாலும், சிரித்துக்கொண்டே நான் நேரலையில் கவனம் செலுத்தினேன். அந்த நபர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் என் கோபம் சற்று குறைந்துள்ளது" என்றும் கூறியுள்ளார். 

இந்த சம்பவமானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.