ஒரே ஒரு மனைவி 300 துண்டுகளாக நறுக்கி டிபன் பாக்சில் பார்சல் கட்டிய கணவன்..! பதற வைக்கும் காரணம்!

மனைவியை கொன்றதோடு மட்டுமில்லாமல், உடலை 300 பாகங்களாக அறுத்து டிபன் பாக்ஸில் கணவர் அடைத்த சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் வடக்கு திசையில் உள்ள மாநிலங்களுள் ஒன்று ஒடிசா. இந்த மாநிலத்தில் சோம்நாத் பரிதா என்ற 78 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு முன்னாள் ராணுவ மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மனைவியின் பெயர் உஷஸ்ரீ. இவரின் வயது 61. இவர்களுடைய பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

2013-ஆம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதங்கள் முற்றியதால், சோம்நாத் உஷஸ்ரீயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலை 300 பாகங்களாக வெட்டி பல்வேறு பெட்டிகளில் அடைத்துள்ளார். துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக தொடர்ந்து பெட்டிகளின் மீது ஃபினாயிலை ஊற்றி வந்தார்.

இதனிடையே, பிள்ளைகள் பெற்றோரை தொடர்பு கொள்வதற்காக முயற்சி செய்துள்ளனர். தொடர்புகொள்ள இயலவில்லை என்பதால், உறவினர் ஒருவரிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளனர். அந்த உறவினர் சோம்நாத்தின் வீட்டிற்கு சென்று போது எந்தவித பதிலும் இல்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது, துர்நாற்றம் வீசியதால் அவர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சோம்நாத்திடம் விசாரணை நடத்தினர். முதலில் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ளாத சோம்நாத், பின்னர் வேறு வழியின்றி செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கானது கடந்த 6 வருடங்களாக நடந்து வந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சோம்நாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.