அவன் என் தாயை கற்பழித்தவன்..! 6 வருடங்கள் காத்திருந்து பலி தீர்த்த மகன்! கேட்போரை மிரள வைக்கும் சம்பவம்!

6 ஆண்டுகளுக்கு முன்னர் தாயை பலாத்காரம் செய்த கொடூரனை மகன் கொலை செய்திருப்பது இந்தோனேஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தோனேஷியா நாட்டில் ஈஸ்ட் ஜாவா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட பசூரா என்ற நகரை சேர்ந்தவர் மாலுத் ரியான்டோ. இவருடைய வயது 18. சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த யாசின் ஃபத்திலா என்ற 49 வயது நபரை கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார். அதாவது 6 ஆண்டுகளுக்கு முன்னர் யாசின் இளைஞரின் தாயாரை கொடூரமான முறையில் கற்பழித்துள்ளார். தனக்கு வெறும் 12 வயதே ஆனதால் தன்னால் அப்போது எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால் ஊர் பெரியவர்கள் இந்த விவகாரத்தை அப்போதே முடித்து வைத்துவிட்டனர்.

ஆனாலும் வியாசன் மீதான வெறுப்பு எனக்கு சற்றும் குறையாமல் இருந்தது. அதனால் ஆத்திரமடைந்த நான் அவனை பழிவாங்க திட்டம் தீட்டினேன். அதன்படி சம்பவத்தன்று யாசின் தன்னுடைய உறவினர்களை பார்ப்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறையினர் மாலுத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது இந்தோனேசியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.