சரஸ்வதி! லதா! மீனா 48 வயதில் 3 மனைவிகள்! இறுதியில் கட்டிலில் கேபிள் டிவி ஆப்பரேட்டருக்கு நேர்ந்த விபரீதம்!

3 பெண்களை திருமணம் செய்த பலே கில்லாடி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகாசிக்கு மிகவும் அருகில் விஸ்வநத்தம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு முத்துசுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 48. இவர் அதே பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு சரஸ்வதி, லதா, மீனா என 3 மனைவிகள் உள்ளனர்.

முத்துசுந்தரமூர்த்தியின் தாயாருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை மோசமானது. இதனால் தன்னுடைய தாயாரை உடனிருந்து கவனித்துக்கொள்வதற்காக முத்துசுந்தரமூர்த்தி தன்னுடைய 3-வது மனைவியான மீனாவுடன் மதுரை சென்றார். அங்கு தன்னுடைய தாயாரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வந்தார்.

இதனிடையே முத்துசுந்தரமூர்த்தியின் உடல்நிலை சற்று குன்றியதால் அவர் வீடு திரும்பினார். செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக மீனாவை ஏற்பாடு செய்ய அனுப்பினார். பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாக மீனா செல்போனில் கூறியபோது மறுமுனையிலிருந்து முத்துசுந்தரமூர்த்தி பேசவில்லை.

உடனடியாக மீனா சிவகாசிக்கு புறப்பட்டு வந்தார். வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் முத்துசுந்தரமூர்த்தி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். முத்துசுந்தரமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முத்துசுந்தரமூர்த்தியை மர்மமான முறையில் கொலை செய்த நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது நேற்று சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.