கடைக்குள் இருந்து துர்நாற்றம்! செத்து அழுகிக் கிடந்த டெய்லர்! நண்பனின் மனைவிக்கு ரூட் விட்டவருக்கு நேர்ந்த பயங்கரம்! திருப்பூர் திகுதிகு!

மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட நண்பனை கணவரை கொலை செய்த சம்பவமானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு இன்பவளவன் என்ற 36 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு சின்ன கடையை வாடகைக்கு எடுத்து டெய்லர் வேலை பார்த்து வந்தார். 

இன்பவளவன் டெய்லர் கடை தொடங்குவதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனத்தில் மகேந்திரன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். அடிக்கடி இன்பவளவன் மகேந்திரனின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது இன்பவளவனுக்கும், மகேந்திரனின் மனைவிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனை விரைவில் அறிந்து கொண்ட மகேந்திரன் தன் மனைவியை கண்டித்தார். இன்பவளவன் ஒரு டெய்லர் கடையை தொடங்கிய பின்னரும் மகேந்திரனின் மனைவியிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் என்பவள் அவனிடம் பேசி விட வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி மகேந்திரன் சில நாட்களுக்கு முன்னர் இந்த வளவனின் டெய்லர் கடைக்கு சென்றுள்ளார். இருவரும் நன்றாக பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவகையில், இன்ப வளவன் மகேந்திரனின் மனைவியைப் பற்றி அவதூராக பேசத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள இயலாததால் மகேந்திரன் அருகிலிருந்த நாற்காலியை எடுத்து இன்பவளவனின் தலையை உடைத்தார். மேலும் தயிரால் அவருடைய கழுத்தை நெரித்தும் மகேந்திரன் கொலை செய்தார். 

இன்பவளவன் இறந்ததை உறுதி செய்துகொள்ள மகேந்திரன், அவருடைய உடனே கடைக்கு வைத்து பூட்டி அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். நெடுநாட்களாகியும் இன்பவளவனை காணவில்லை‌. கடையும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல்துறையினரை அழைத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கடையின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றபோது இன்பவளவனின் பிணம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

சடலத்தை உடனடியாக காவல்துறையினர் அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பெயரில் இன்பவளவனின் நண்பர்களிடம் விசாரித்தபோது மகேந்திரன் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.