தகாத உறவு தான்..! ஆனால் அதுக்கும் ஒரு லிமிட் வேண்டாமா? ஓயாமல் தொந்தரவு செய்த கள்ளக்காதலிக்கு நேர்ந்த பயங்கரம்!

ஓயாமல் பணம் கேட்டு வந்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவமானது ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் நகர் என்னும் இடத்தில் 39 வயதான முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராமலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இவர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் ராஜபாளையத்துக்கு இடம்பெயர்ந்தனர். பிள்ளைகள் ராஜபாளையத்தில் பள்ளியில் படித்து வரும் நிலையில் ராமலட்சுமி அவர்களுடன் தங்கியுள்ளார். முருகன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனுடைய ராஜலட்சுமிக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே ராமலட்சுமி சண்முகத்திடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.

இதனை நிறுத்திக்கொள்ளுமாறு ராமலட்சுமியிடம் அறிவுறுத்துவதற்கு சண்முகம் நேற்று பிற்பகலில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாய்த்தகராறு முற்றி போனது. ஆத்திரத்தில் சொன்னதன் ராஜலட்சுமியின் வாயை பொத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்னர் ராஜபாதையில் காவல் நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.‌இந்த சம்பவமானது ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.