வாட்ஸ் ஆப் DPல் காதலியின் ஆடையில்லா புகைப்படம்! நண்பர்களை அதிர வைத்த இளைஞன்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

19 வயது இளம் பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகரில் குரார் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் 20 வயது இளைஞர் ஒருவர் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண்னை விரும்பினார். இருவரும் காதலித்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் இளைஞனின் சுயரூபத்தை புரிந்து கொண்ட இளம்பெண் அவரை விட்டு பிரிந்து செல்ல முயன்றார்.

ஆனால் அந்த இளைஞன் இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை வைத்துக்கொண்டு அவரை மிரட்டியுள்ளார். மேலும் தன்னுடைய இச்சைகளுக்கு இடம்கொடுக்காவிடில் இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதற்கு அந்த பெண் அஞ்சாமல் இருந்ததால், சம்பந்தப்பட்ட இளைஞன் அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை தன்னுடைய வாட்ஸ்அப் டிபியாக வைத்துள்ளார். இருவரும் ஒன்றாக காதலித்து இருந்தபோது அக்ஷா கடற்கரையில் இந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட இளைஞன் எடுத்துள்ளான்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞனை பாலியல் தொந்தரவு, வேண்டுமென்றே அசிங்கப்படுத்துவது, பெண்ணை மானபங்கம் படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

பெண்ணின் பாதுகாப்பு கருதி இருவரின் அடையாளங்களையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த இளைஞனை சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது மும்பை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.