நண்பர்களிடம் சவால் விட்டு 130 அடி உயரத்திலுள்ள பாலத்திலிருந்து விபத்தில் இளைஞரொருவர் இடுப்பு எலும்பை உடைத்து கொண்ட சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை பணயம் வைத்து நண்பனுடன் பெட்! 130 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் குதித்த இளைஞன்! இடுப்பு எலும்பி முறிந்து விபரீதம்!

க்ரோயேஷியா நாட்டில் சைபனிக் என்னும் நகரம் அமைந்துள்ளது. நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் வித்தியாசமான முறையில் பந்தயம் ஒன்றை கட்டியுள்ளார். அதாவது ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள க்ரோயேஷியன் என்னும் பாலத்தின் மேலிருந்து கீழே குதிப்பதாக பந்தயம் கட்டியுள்ளார்.
எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் 130 அடி உயரத்திலிருந்து தண்ணீரில் குதித்துள்ளார். இவ்வளவு உயரத்தில் இருந்து வேகமாக தண்ணீரில் குதித்ததால் அவளுடைய இடுப்பு எலும்பு உடைந்துள்ளது. சுற்றியிருந்த நண்பர்கள் மீட்பு குழுவினரை சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைத்துள்ளனர்.
அவர்கள் இடுப்புடைந்த அந்த இளைஞரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிகழ்வானது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பேர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.