பெண்களே உங்கள் பின்புறம் பத்திரம்..! பெண்ணின் பின்புறத்தைத் தட்டுவதற்காக சுற்றித்திரியும் இளைஞன்

சாலையில் தனியாக செல்லும் பெண்களின் பின்புறத்தை கட்டுவதற்காக இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் செல்கின்ற சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை நங்கநல்லூரில் டி.ஜி.ஓ காலனி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இளம்பெண்  நடந்து செல்வதை கவனித்த அவர், மீண்டும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதே பாதையில் வந்துள்ளார்.

அப்போது நடந்து கொண்டிருந்தான் அந்த பெண்ணின் பின்புறத்தில் தட்டி அநாகரீகமாக செயல்பட்டுள்ளார். உடனடியாக அந்த பெண்மணி கத்தி கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவரை பார்த்ததாக கூறியுள்ளனர்.

இதனிடையே, பழவந்தாங்கல் இதேபோன்று ஒரு இளம்பெண்ணின் பின்புறத்தில், இதே இளைஞர் தட்டி சென்றுள்ளார்.  ஆனால் இம்முறை பொதுமக்கள் விரைந்து சென்று அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர்.

மேலும் அவர்கள் அந்த இளைஞரை பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இளைஞரின் பெயர் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறையில் வைத்துள்ளனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது