5 பொண்டாட்டி மாதவன்! நம்பிச் சென்ற பெண்களை வளைத்துப் போட்ட கில்லாடி! பிறகு நேர்ந்த பரிதாபம்!

போலி நகைகளை வைத்து ஏமாற்றி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகையின் சுற்றுவட்டாரமான சீர்காழி, சட்டநாதபுரம், புத்தூர் மங்கை மடம் ஆகிய பகுதிகளில் வழக்கமாக நகைகளை அடகு வைத்து வந்துள்ளார்.

தொடர்ந்து நகைகளை அடகு வைப்பதற்கு வந்ததால் சில அடகு கடை உரிமையாளர்களுக்கு இவர் மீது சந்தேகம் வந்தது. அப்போது காவல்துறையினரிடம் இதுகுறித்த தகவலை தெரிவித்தனர்.

பல நாட்களாக மாதவனை காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது நாகை சுற்றுவட்டாரம் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் இதேபோன்று செய்து வருவதைக் கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திட்டமிட்டு நேற்று மாதவனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது காவல்துறையினருக்கு பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் காத்திருந்தன. அதாவது போலி நகைகளை தங்க நகைகள் என்று கூறி இதுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதை காவல்துறை  கண்டறிந்தனர்.

மேலும் அந்த படத்தின் மூலம் பங்களா வீடுகள், சொகுசு பைக் ஆகியவற்றை வாங்கியுள்ளார். இவருக்கு 5 மனைவிகள் உள்ளனர். அவர்களுடன் ஆடம்பரமான வாழ்கையை வாழ்வதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறினார்.மேலும் இவரிடமிருந்து போலியான ஆதார் கார்டுகள், பான் கார்டுகள், பைக்,  முதலியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மாதவனின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது நாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.