வாழைப்பழத்தில் விஷம் வைத்து காதலில் வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவமானது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்கு வாழைப்பழத்தில் விஷம்..! கும்பகோணத்தை அதிர வைத்த கொலை! பதற வைக்கும் காரணம்!
கும்பகோணத்திற்கு உட்பட்ட நந்திவனம் பிரதான சாலையில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளின் பெயர் தமிழ். தமிழின் வயது 20. இவர் கும்பகோணத்திலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கும்பகோணத்தில் கோபிநாத பெருமாள் கோவில் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த முனியன். மகனின் பெயர் ஐயப்பன். ஐயப்பனின் வயது 26. ஐயப்பனுக்கும் தமிழுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
சமீப காலமாக இருவருக்கும் இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் தமிழ் ஐயப்பனிடம் பேசாமல் இருந்துள்ளார். தமிழின் நடவடிக்கைகளை சந்தேகித்து ஐயப்பன் நேராக அவர் பணிபுரியும் துணி கடைக்கு சென்றுள்ளார். தமிழை சேஷம்பாடி என்னுமிடத்திற்கு ஐயப்பன் அழைத்து சென்றுள்ளார். தன்னிடம் பேசாதது பற்றி ஐயப்பன் தமிழிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தற்கொலை செய்து கொள்வதாக முடிவெடுத்தனர். அதன்படி தமிழுக்கு ஐயப்பன் வாழைப்பழத்தில் எலி மருந்து கலந்து கொடுத்தார். தமிழிடம் முதலில் நீ சாப்பிடு என்று கூறி பிறகு தானும் சாப்பிடுவதாக ஐயப்பன் உறுதியளித்துள்ளார்.
ஆனால் தமிழ் வாழைப்பழத்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்த பின்னர் ஐயப்பன் தன்னுடைய நிலையிலிருந்து மாறியுள்ளார். அதன்பிறகு ஐயப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக தமிழின் உறவினர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் தமிழை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தமிழின் உறவினர்கள் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதற்காக தமிழை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்த சம்பவமானது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.