பக்கத்தில் வா..! இதெல்லாம் தப்பு இல்ல..! 14 வயது சிறுமியை தவறாக பயன்படுத்திய ஒரே வீட்டில் வசித்த உறவுக்கார இளைஞர்..! சேலம் பகீர்!

தன் உறவினர் என்றும் பாராமல் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் மல்லூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ஏர்வாடியில் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் பெற்றோர் 7 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டனர். அந்த சிறுமியின் தந்தையின் சகோதரியே அவரை வளர்த்து வந்துள்ளார்.

இவர்கள் வசித்து வந்த வீட்டிலே திருமலை என்ற நபர் வசித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமலை இந்த சிறுமியிடம் பாலியல் ரீதியில் சில்மிஷங்கள் செய்து வந்துள்ளார். பின்னர் ஒரு நாள் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த சிறுமி அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களிடம் விவரமாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் அப்பகுதியில் இயங்கி வரும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்‌. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் திருமலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.