10 வயதில் 18 மாதங்கள் அனுபவித்த கொடுமை! 21 வயதில் குற்றவாளியை மீண்டும் சந்தித்த பெண்! பிறகு நடந்த சம்பவம்!

10 வயதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபரை 11 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் பிரையன் டிக். இவருடைய வயது 49 இவர் முன்னாள் ராணுவ வீரராவார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய பக்கத்து வீட்டில் லாரா குக் என்ற 10 வயது சிறுமி வசித்து வந்தார். அப்போது சுமார் 18 மாத காலத்திற்கு அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து லாரா 2 வருடங்கள் கழித்து தன் பாட்டியிடம் கூறினார். உடனடியாக அவர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பிரையன் டிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் அவருக்கு 9 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறை வாசத்திற்கு பிறகு அந்த பெண்ணை எங்கேயாவது கண்டால் பிரையன் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது.

தற்போது லாராவுக்கு 21 வயதாகியுள்ளது. சமீபத்தில் லாரா ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் கத்தி கூச்சலிட தொடங்கினார். உடனடியாக விரைந்து வந்தார் மருத்துவமனை மேலாளர்கள் பிரையனை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர். அதன் பிறகு நிகழ்ந்த சம்பவத்திற்காக லாராவிடம் மன்னிப்பு கேட்டனர்.

இந்த சம்பவமானது அந்த மருத்துவமனையில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.