என் அண்ணி எவ்ளோ அழாக இருக்கா பாரு..! மனைவியிடம் காட்டக்கூடாததை காட்டிய கணவன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

திருமணமான 4 மாதங்களிலேயே பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் ஒதியடிகுப்பம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அருள் என்ற 38 வயது நபர் வசித்து வருகிறார். இவர் காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். 

4 மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜேஸ்வரியின் வயது 30. இருவரும் ஒன்றாக சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள காவல்துறையினர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இதனிடையே நேற்றிரவு யாரும் எதிர்பாராத வகையில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ராஜேஸ்வரியின் தம்பியின் பெயர் சரவணன். இவர் சென்னை பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "20-ஆம் தேதியன்று என்னுடைய சகோதரி என்னிடம் செல்போனில் பேசினார்.  அப்போது அருள் மற்றும் அவரது அண்ணி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். நீ திருமணமாகி வந்த போது, ஒன்னும் கொண்டு வரவில்லை. தற்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இடையூறாக இருக்கிறாய். நீ செத்துவிட்டால் சொத்து முழுவதும் எனக்கே கிடைக்கும் என்று மிரட்டியுள்ளனர்.

மேலும் அருள் தன்னுடைய அண்ணி வெண்ணிலாவுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டு வந்தார் என்றும், அதன் காரணமாக என்னுடைய சகோதரியை கொடுமைப்படுத்தி வந்தார் என்றும் கூறியுள்ளார். அண்ணியின் ஆபாச புகைப்படங்களை செல்ஃபோனில் வைத்துக்கொண்டு அவருடைய அழகை ரசித்துக்கொண்டு என் சகோதரியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொள்ள இயலாமல் என்னுடைய சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய சகோதரியின் மரணத்திற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவணன் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.