குடும்ப கஷ்டம்! சாப்பாட்டுக்கே கஷ்டம்! கடன் வாங்கச் சென்ற கூலித் தொழிலாளி..! லாட்டரியில் கிடைத்த ரூ.12 கோடி! நெகிழ்ச்சி சம்பவம்!

கேரளாவில் தினக்கூலியாக பணியாற்றிவரும் ஒருவருக்கு லாட்டரி சீட்டில் ரூபாய் 12 கோடி பரிசுத்தொகை வந்துள்ளதை அடுத்து அந்த குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளது.


ராஜன் (வயது 55 ) என்பவர் கேரளாவில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் பகுதியிலேயே கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மூத்த மகளின் திருமணத்திற்காக வங்கியில் கடன் பெற்றிருந்தார் . வட்டியும் முதலுமாக அந்த பணம் 7 லட்சம் ரூபாய் கடனாக மாறி இருக்கிறது.

இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் செய்வதறியாது திகைத்து இருந்தார். தன்னுடைய கடனை வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கடை ஒன்றில் விற்கப்பட்டு இருந்த லாட்டரி சீட்டை ரூபாய் 300 கொடுத்து வாங்கியிருக்கிறார். நேற்றைய தினம் அந்த லாட்டரி சீட்டில் என்னை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்று இருக்கிறார்.

எப்படியும் தனக்கு பரிசுத் தொகை கிடைக்காது என்று அவ நம்பிக்கையுடன் கடைக்கு சென்ற அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. அதாவது ராஜனுக்கு ரூபாய் 12 கோடி லாட்டரி சீட்டில் பரிசுத்தொகையாக விழுந்துள்ளது. அடுத்து அவர் இன்பக்கடலில் மூழ்கியுள்ளார்.

இதனால் அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்து தன் குடும்பத்தினருடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். லாட்டரி சீட்டு பெற்றால் சண்டையிடும் அவரது மனைவி தற்போது புன்னகைத்து சந்தோஷத்தில் இருப்பதை அவர் பெருமையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த லாட்டரி சீட்டில் இருந்து பெறப்படும் தொகையின் மூலம் தன் கடனை அடைக்க போவதாகவும் மேலும் சண்டைகளை அவள் விரும்பும் அளவிற்கு படிக்க வைக்க போவதாக கூறியிருக்கிறார்.