ஓனரின் மனைவியை உஷார் செய்த டிரைவர்..! அதிகாலையில் மொட்டை மாடியில் சடலம்..! சேலத்தை பதற வைத்த கொலை!

தன் மனைவியை தவறான உறவுக்கு அடிக்கடி அழைத்ததால் ஆத்திரமடைந்த கணவர் கால் டாக்சி ஓட்டுநரை கொலை செய்துள்ள சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் அன்னதானப்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட மணியனூரை சேர்ந்தவர் அபிஷேக் மாறன். இவருடைய வயது 29. இவருக்கு சொந்தமாக 3 கார்கள் உள்ளன. அவற்றை அதே பகுதியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன ட்ராவல்ஸிடம் ஒப்பந்த முறையில் வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் அதே நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். 

இவர் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி மற்றும் குழந்தை பிரிந்து சென்றனர். அன்றிலிருந்து தன்னுடைய பாட்டியுடன் தனியாக ஒரு வாடகை வீட்டில் அபிஷேக் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் 6-ஆம் தேதியன்று அபிஷேக், தன்னுடைய மொட்டை மாடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது அபிஷேக் மாறனுக்கு அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாகவும் அவ்வப்போது உடலுறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதே பழக்கத்தை அபிஷேக் தாதகாபுரத்திலுள்ள தன்னுடைய டிராவல்ஸ் உரிமையாளரான பிரபாகரனின் மனைவியுடனும் கையாண்டுள்ளார்.

தொடக்கத்தில் அன்பாக பேசி அவரை மடக்கிய பின்னர், கடந்த சில நாட்களாக உடலுறவுக்கு அழைத்து வற்புறுத்தியுள்ளார். இதனால் மன அழுத்தம் அடைந்த பிரபாகரனின் மனைவி தன் கணவரிடம் நிகழ்ந்தவற்றை கூறி அழுது புலம்பியுள்ளார். ஆத்திரமடைந்த கணவர் பிரபாகரன் தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியுடன் அபிஷேக் மாறனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

காவல்துறையினர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அன்னதானப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.