கொரோனா..! கள்ளக்காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொழில் அதிபர்..! நள்ளிரவில் தப்பி ஓட்டம்!

கள்ளக்காதலியை பார்ப்பதற்காக மருத்துவர் அவசரம் என்ற ஸ்டிக்கரை ஒட்டி தப்பிவந்த தொழிலதிபர் மீண்டும் தப்பிச்சென்ற சம்பவமானது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் அமுதா என்ற 37 வயது பெண் வசித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணமான நிலையில் தன்னுடைய கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். பின்னர் மலேசியா நாட்டிலுள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்ப்பதற்கு சென்றார். 

அங்கு இவருக்கு இராமநாதபுரத்திலிருந்து வந்த 57 வயது முதியவரான அப்துல் அகமது மைதீன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அமுதாவின் மீது ஆசைப்பட்ட அகமது மைதீன் தன்னுடைய மனைவியை பிரிந்தார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இருவரும் மலேசியாவிலிருந்து தமிழகம் திரும்பினர். அமுதா தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் தலைஞாயிறு பகுதியில் வசித்து வந்தார். அகமது மைதீன் ராமநாதபுரத்தில் தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே அவருக்கு அமுதாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தன்னுடைய சொகுசு காரில் "மருத்துவ உதவி வேண்டும்" என்ற ஸ்டிக்கர் ஒட்டி தலைஞாயிறு பகுதிக்கு புறப்பட்டுள்ளார்.

வழிதோறும் இவருடைய காரை பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை தலைஞாயிறு பகுதியிலுள்ள அமுதா தன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரையும் தனிமைப்படுத்தி, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். 4 பேரு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அகமது மைதீன் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்ததால் இதுபோன்ற தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்பட்டதாக அப்பகுதி காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அகமது மைதீன் வீட்டிற்கு சற்று தொலைவில் தன்னுடைய காரை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் அகமது மைதீன் காவல்துறையினரை ஏமாற்றி தன்னுடைய காரில் தப்பி சென்றுள்ளார். காலை நேரத்தில் காவல்துறையினர் அவருடைய கார் இல்லாததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்கள் தங்களுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.