35 வயது ஆணுடன் முறையற்ற காதல்! ஆபாச படம்! 37 வயது பொள்ளாச்சி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்கள் எடுத்து ஆண் ஒருவர் மிரட்டியுள்ள சம்பவமானது பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என்னும் பகுதி அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பெண் இங்குள்ள மகாலட்சுமி 37 வயது ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 9 ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே தொடக்கத்தில் அன்னியோன்னியம் இருந்தாலும் காலம் செல்ல செல்ல அன்பு கரைந்து மோதல்கள் உருவாக தொடங்கின. இறுதியாக 4 வருடங்கள் முன்னர் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு இந்த பெண் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். கிண்டியில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் கிஷோர் 35 வயது என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரின் பூர்வீகம் கோவை மாவட்டம் என்பதால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது பின்னர் காதலாக மாறியது. பெண்ணிடம் உன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று கிஷோர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இருவரும் உல்லாசமாக பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தனர். பிரபல ஹோட்டல்களில் இருவரும் உல்லாசமாக பல நாட்களை கழித்துள்ளனர். அப்போது பெண்ணுக்குத் தெரியாமல் கிஷோர் அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்துள்ளார். உல்லாசம் அனுபவித்து முடித்த பின்னர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கிஷோர் மறுத்துள்ளார். அவரை வற்புறுத்தியபோது தான் எடுத்து வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளார். 56 லட்சம் ரூபாயை மிரட்டி கிஷோர் பெண்ணிடம் பெற்று கொண்டுள்ளார்.  ஆனால் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவரிடம் தரவில்லை.

ஆத்திரமடைந்த பெண் ஆன்லைன் மூலமாக அண்ணாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கிஷோர் மீது பாலியல் பலாத்காரம், மோசடி, அந்தரங்க பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிண்டில் சம்பவங்கள் நிகழ்ந்ததால் சென்னையிலிருந்து காவல்துறையினருக்கு வழக்கை மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.