உடல் முழுவதும் பற்றி எரிந்த தீ! அப்படியே பைக்கில் சென்ற இளைஞன்! சேலம் சாலையில் பரபரப்பு சம்பவம்!

உடலில் பரவிய தீயுடன் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் பொட்டியபுரம் காலனி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு குப்புசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் விக்னேஷ். விக்னேஷின் வயது 24. நேற்று காலை விக்னேஷ் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருடைய உடல் முழுவதிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும் உடலில் தீ பரவிக்கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதால் உடல் முழுவதும் தீ பரவி கருக தொடங்கியது. பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக்கண்ட ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விக்னேஷ் மீட்டெடுத்து சேலம் அரசு மருத்துவமனையின் அனுமதித்தனர். உடலில் 90% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சம்பவம் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்தனர். ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆதலால் விக்னேஷ் தீக்குளித்த பின்னர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர். மேலும் விக்னேஷிடம் காவல்துறையினர் இறுதி வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர். அதாவது, காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, அவர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டதால் பண்ணப்பட்டியிலுள்ள கிளினிக்குக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.