சுடிதார் போட்டுக் கொண்டு பெண்களின் ப்ரா, பேண்ட்டி என உள்ளாடைகளை திருடி இளைஞன் செய்யும் நூதன செயல்! வீடியோவை பார்த்து அதிர்ந்த மக்கள்!

திருடன் ஒருவன் பெண்கள் போன்று நைட்டி மற்றும் சுடிதார் அணிந்து கொண்டு உள்ளாடைகளை திருடிய சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தின் துடியலூர் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட மீனாட்சி குடியிருப்பில் 245-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் குடியிருப்பின் பெரும்பாலான வீடுகளிலிருந்து பெண்களின் உள்ளாடைகளும், காலணிகளும் திருடப்பட்டு வந்துள்ளன. திருடப்பட்ட அனைத்து பொருட்களும் அதே குடியிருப்பில் உள்ள ஆளில்லா வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட குடியிருப்பு பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

அப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமரா பதிவுகளில் திருடன் பெண்களை போன்று நைட்டி மற்றும் கொலுசுகள் அணிந்துகொண்டு குடியிருப்புகளில் வலம் வந்துள்ளார்.உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் இரவு நேரங்களில் குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஓரிரு நாட்களாக அந்த சைக்கோ திருடன் தொடர்ந்து பெண்களின் உள்ளாடைகள் மற்றும் காலணிகளை திருடி வருகிறான். 

இந்த வினோத திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.