100க்கும் அதிகமான கேர்ள் பிரண்ட்ஸ்! கல்யான ஆசை காட்டி கட்டிலில் வீழ்த்திய பலே இளைஞர்! பரபரப்பு சம்பவம்!

100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞன் தலைமறைவாகியுள்ள சம்பவமானது ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரிசா மாநிலத்தில் புவனேஸ்வர் எனும் நகர் அமைந்துள்ளது. இங்கு பிரியஞ்சன் நாயக் என்பவர் வசித்துவருகிறார். இதுவரை இவர் 100-க்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். அவர்களிடம் நெருங்கி பழகி உல்லாசம் அனுபவிப்பதை வழக்கமாக கொண்ட இவர், அதன் பின்னர் நிகழ்ந்தவற்றை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த பிரியஞ்சன் சில நாட்களிலேயே ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

சமீபத்தில் பெண்ணொருவர் இவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "பிரியஞ்சன் என்னை காதலிப்பது போல் நடித்து வந்தார். அதனை நம்பி நான் ஏமாந்து, இருவரும் உல்லாசம் அனுபவித்தோம்.

அந்த சம்பவத்தை வைத்து அவர் என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார். 1.5 லட்சம் ரூபாயை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டு தற்போது தலைமறைவாகி விட்டார். அவர் சிறைக்கு சென்றாலும், சில நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்து விடுகிறார்" என்று வருத்தத்துடன் கூறினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலரான ரிதுபர்மா கூறுகையில், "தன்னை ஒரு மருத்துவர், பொறியாளர் என்று கூறி பிரியஞ்சன் பெண்களிடம் அறிமுகம் செய்து கொள்வார். விவாகரத்தான பெண்கள், தனிமையில் வாடும் பெண்கள் ஆகியவர்களை தன்னுடைய முக்கிய குறியாக வைத்திருப்பார்.

ஒவ்வொரு முறையும் சிறைக்கு சென்றும், உடனடியாக வெளியே வந்துவிடுவார். இதில் என்ன வேடிக்கை என்றால் பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவர் அவரை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்" என்று கூறினார்.

தற்போது சமீபத்தில் ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரியஞ்சனை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது ஒரிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.