திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்த பின் காதலியை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்பி வந்தேன்! மோசம் செய்துவிட்டு கழட்டிவிட்டுவிட்டான்! தாய், தந்தையை உதறிய காதலிக்கு நேர்ந்த பரிதாபம்!

மதுரையில் சிக்கந்தர்சாவடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த இடத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகளின் பெயர் சாய்லட்சுமி. சிக்கந்தர்சாவடி அருகே ராஜாக்கூர் என்னும் இடம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் செந்திலகுமார். இவருக்கும் சாய்லட்சுமிக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இதனிடையே செந்தில்குமார் வேலை நிமித்தமாக சென்னைக்கு இடம்பெயர்ந்தார். ஒரு அளவிற்கு பணம் சம்பாதித்த பிறகு சாய்லட்சுமியை சென்னைக்கு வருமாறு கூறியுள்ளார். செந்தில்குமாரின் வார்த்தைகளை நம்பிய சாய் லட்சுமி வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 17 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு சென்னைக்கு வந்தார். தன் மகளை காணவில்லை என்று சக்திவேல் சிக்கந்தர் சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
சென்னைக்கு வந்தவுடன் செந்தில்குமார் சாய்லட்சுமியிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டார். இருவருமே பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். திடீரென்று ஒரு நாள் குமார், சாய்லட்சுமியிடம் "நீ ஊருக்கு சென்று விடு உன்னை தேடி வந்து உன் வீட்டாரிடம் பெண் கேட்பேன் " என்று கூறி சாய்லட்சுமியை மதுரைக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆனால் 2 மாதங்கள் மேலாக செந்தில்குமார் சாய்லட்சுமியுடன் இருந்த தொடர்பை முறித்து கொண்டார். தான் ஏமாற்றப்பட்டதை பிறகு உணர்ந்த சாய்லட்சுமி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி செந்தில்குமார் மீது புகாரளித்துள்ளார். இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.