ஒரே ஒரு தடவை அட்ஜெஸ்ட்மென்ட்..! ஓஹோ என வாழ்க்கை..! நம்பி இளைஞனுக்கு முந்தி விரித்த பல பெண்கள்!

பிரபல தொழிலதிபர், அரசியல்வாதி என்றெல்லாம் பொய் கூறி பல்வேறு பெண்களை ஏமாற்றி இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரு நகரில் வேலைவாய்ப்புக்காக வரும் பெண்களை ஏமாற்றி இளைஞர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இளம்பெண் ஒருவர் பெங்களூரு நகரிலுள்ள அல்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, "எனக்கு அவர் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பழகி வந்தார்.

பின்னர் என்னை வற்புறுத்தி அல்சூர் பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். என்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் காலையில் அவர் ஹோட்டலில் இருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் ஹோட்டல் ரிசப்ஷனில் விசாரித்த போது அவருடைய பெயரை மாற்றி கொடுத்து இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நான் ஹோட்டலில் மீதி பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்" என்று கூறினார்.

உடனடியாக பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ‌ விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது அந்த நபரின் உண்மையான பெயர் ஜஹாங்கீர் என்பதும், கோக்கநட் ஹோட்டலில் குரூப் மேலாளராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. அப்போது அவர் பெண்களிடம் நைசாக பேசி, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விடுவார். மேலும் அவர்களிடம் ஹோட்டல் உரிமையாளர், பிரபல அரசியல்வாதியின் மகன், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ, ஆகிய பொய்களையும் கூறுவார்.

சமீபத்தில் தெலங்கானாவில் ஒரு பெண்ணிடம் தன்னை கார்த்திக் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அந்த பெண் தனியாக நின்று கொண்டிருந்தபோது, லிஃப்ட் தருவதாகக் கூறி அவரை காரில் ஏற்றி சென்றுள்ளார். திடீரென்று அந்த பெண், தன் குழந்தைக்காக பால் கேட்க, காரை நிறுத்திவிட்டு பெண்ணின் கிரெடிட் கார்டை வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதிலிருந்து 40 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதுபோன்று பல குற்ற சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார். பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கப்பட்ட குற்றச் செய்திகளை வைத்து, இவர் மீது வழக்கு பதிவு செய்வதற்காக அல்சூர் பகுதி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது தென்னிந்திய மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.