பிரபல நடிகையை ஏற்பாடு செய்து தருகிறேன்..! ஆசையை தூண்டிய நபர்! ரூ.10 லட்சம் ஸ்வாகா! எப்படி தெரியுமா?

பிரபல நடிகர் நடிகைகளின் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


தாம்பரத்திற்கு அடுத்து அமைந்துள்ள சிட்லபாக்கத்தில் போஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் சினிமா தயாரிப்பாளர்களாவர். இதனிடையே இருவரும் "அலிபாபாவும் 40 குழந்தைகளும்" என்ற திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்தனர்.

இந்த திரைப்படத்தில் காமெடியனாக யோகிபாபுவும், கவர்ச்சி கதாநாயகியான கேத்தரின் தெரசாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டனர். இதனிடையே இருவருடைய கால்ஷீட்களையும் பெறுவதற்கு வடபழனியில் சினிமா அலுவலகம் நடத்திவரும் அண்ணாதுரை என்பவரை தொடர்பு கொண்டனர்.

இன்னும் இருவரையும் சினிமாவில் நடிக்க கால்ஷீட் பெறுவதற்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று இருவரிடமும் அண்ணாதுரை கூறியுள்ளார். ஒப்புக்கொண்ட இருவரும் முதல் தவணையாக 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். ஆனால் அண்ணாதுரை தான் கூறியவாறு கால்ஷீட்களை பெற்றுத்தரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அண்ணாதுரையிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் அண்ணாதுரை சம்மதிக்கவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்த இருவரும் நிகழ்ந்தவற்றை வடபழனி காவல் நிலையத்தில் கூறி புகாரளித்துள்ளனர். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.