கழட்டுடா டிரஸ்ஸ..! ஏறுடா பைக்ல..! இளைஞனை நிர்வாணமாக்கி ஊர்வலம் அனுப்பிய கிராம மக்ககள்! பரபரப்பு காரணம்!

இளம்பெண்ணை துரத்தி வந்த இளைஞரை கிராம மக்கள் அடித்து நிர்வாணப்படுத்தி துரத்திய சம்பவமானது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் திவிந்த் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அருகிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பும்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த பெண்ணுக்கு பின்னால் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சென்ற செவ்வாய்க்கிழமையன்று, காகிதத்தில் தன்னுடைய செல்போன் எண்ணை எழுதி அதனை இளைஞர் இளம்பெண் மீது வீசியுள்ளார்.

இதனை பார்த்த கிராமவாசிகள் ஆத்திரம் அடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட இளைஞரை அடிக்க தொடங்கினர். மேலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் உறவினர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை தர்மஅடி அடித்து நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் துரத்தி அடித்துள்ளனர். இரு தரப்பினரும் இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை.

ஆனால் இந்த சம்பவத்தின் சில வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது திவிந்த் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.