ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை தீ வைத்துக்கொண்ற கொடூரனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்! வீட்டோடு சேர்த்து கொளுத்திய கொடூரன்! பிறகு நேர்ந்த பயங்கரம்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!
பிரிட்டன் நாட்டில் யார்க்ஷயர் எனும் மாகாணம் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் ஹடர்ஸ்ஃபீல்டு என்னும் நகரமும் ஒன்றாகும்.
2002-ஆம் ஆண்டு ஷாகித் முஹம்மத் என்ற இளைஞன் தன் குடும்பத்துடன் இப்பகுதியில் வசித்து வந்தார். அவருடைய சகோதரி தன் இனத்தை சாராத ஒருவரை காதலித்து வந்தார். சில மாதங்கள் கழித்து இந்த செய்தியானது ஷாகிதுக்கு தெரியவந்துள்ளது. தன் சகோதரியை ஷாஹித் வன்மையாகக் கண்டித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண் அவரின் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இவர்களின் பெற்றோரும் இதை கண்டிக்கவில்லை. இதனால் ஷாகித் கடும் ஆத்திரம் அடைந்தார். தன் குடும்பத்தை கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
அதன்படி சம்பவத்தன்று இரவு அனைவரும் உறங்கி கொண்டிருந்த போது பெட்ரோல் பாட்டில்களை வீட்டிற்குள் வீசியுள்ளார். வீசிய பிறகு தீக்குச்சியை உள்ளே போட்டுவிட்டார். இந்த கொடூர செயலில் குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷாகிதின் பாட்டி மட்டும் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி ஒரே வாரத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் நாட்டு காவல்துறை முற்பட்டபோது, பாகிஸ்தான் இணக்கம் காட்டாமல் இருந்தது. இறுதியாக 4 வார காலமாக லீடஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து தீர்ப்பளித்த நீதிபதி ஷாஹித் முகம்மதுக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவமானது இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.