ஓங்கி கொத்திய கொடிய விஷப்பாம்பை கடித்து குதறிய இளைஞன்! பிறகு நிகழ்ந்த அதிசயம்!

தன்னை கொத்திய கொடிய விஷப்பாம்பை மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் ஆவேசத்தில் கடித்து குதறி இருக்கும் சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஈட்டா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட அஸ்ரோலி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதீத மதுப்பழக்கம் உடையவர். நேற்று வழக்கம் போல அளவுக்கு அதிகமாக குடித்து போதையில் ராஜ்குமார் மயங்கி கிடந்தார்.

அப்போது இவரின் வீட்டு பின்புறத்திலிருந்து கொடிய விஷப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது. அந்த பாம்பு ராஜ்குமார் பலமுறை தீண்டியது. மதுபோதையில் இருந்த ராஜ்குமார் மிகவும் ஆவேசமடைந்து பாம்பை பிடித்து கடித்து குதறியுள்ளார். பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

பாம்பின் விஷம் ஆனது ராஜ்குமாரின் உடலில் ஏறியதால் அவர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை தூக்கி சென்று அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.