ஏற்கனவே 4 குழந்தை! 5வது குழந்தை பிறந்த மறுநாள்..! தலாக்..தலாக்..தலாக்..! மனைவியை அதிர வைத்த கணவன்! அதிர்ச்சி காரணம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு ஐந்து பெண் குழந்தை பிறந்ததால் கணவர் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் என்ற பகுதியை சேர்ந்தவர் கமில். இவருக்கு பெண் ஒருவருடன் கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. கமில்-க்கு இதுவரை நான்கு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கமலின் மனைவி தற்போது ஐந்தாவது முறையாக கர்ப்பம் தரித்து இருந்திருக்கிறார். 

கமிலின் மனைவி தன்னுடைய பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஐந்தாவது பிரசவத்திலும் கமிலின் மனைவிக்கு பெண் குழந்தையை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்துள்ளதை போனில் கேட்டு தெரிந்து கொண்ட கமில், தன் மனைவியை அந்த நிமிடமே முத்தலாக் என்று சொல்லி விவகாரத்தை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.