முதியவர் என்றும் பாராமல்..! கொலை வெறித் தாக்குதல்! பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் தாக்கப்பட்ட சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கரட்டுப்பட்டி ரைஸ்மில் ரோடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதி மின்வாரியத்தில் கணக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி சுப்பிரமணியன் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தனது உறவினரான செல்வம் என்பவரிடமிருந்த தென்னந்தோப்பை 16 லட்சம் மதிப்பில் பெற்றுக்கொள்வதற்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற செல்வம் தென்னந்தோப்பை சுப்ரமணியனின் பெயருக்கு மாற்றி கிரையம் செய்யவில்லை. பணத்தையும் சுப்ரமணியன் இடம் திருப்பித்தரவில்லை.

பல நாட்கள் பொறுத்துக்கொண்ட சுப்பிரமணியன் தனக்கு நேர்ந்த இன்னல்களை ஊர் பெரியவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். சுப்பிரமணியன் செய்ததை அறிந்த செல்வம் கடுமையாக கோபமடைந்தார்.

தனது மனைவியான கவிதாவின் தூண்டுதலில் உறவினர்களின் உதவியுடன் 5-ஆம் தேதியன்று சாலையில் சென்று கொண்டிருந்த சுப்பிரமணி கடுமையாக தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வம் மற்றும் அவரது மனைவி கவிதாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட உறவினரான பிரகாஷ் என்பவர் தலைமறைவாகி விட்டதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.