தாயை கொடூரமாக கொலை செய்த மகன்! பிறகு எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

மும்பையில் தங்கள் வீட்டில் தாய் மற்றும் மகன் இறந்து கிடந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவரது தாயார் மீனாக்ஷி ஐயர் 2017-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள மீரா சாலை பகுதியில் உள்ள மேரிகோல்ட் அப்பார்ட்மெண்டிற்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் வீட்டை லீசில் எடுத்திருந்தனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த லீசானது முடிவடைந்தது. இதனால் வீட்டுக்காரர் அவர்களை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

2 மாதங்களில் காலி செய்து விடுவதாக அவகாசம் கேட்டுள்ளார்.இந்நிலையில், இன்று காலை வெங்கடேஷ் ஐயர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த பிளாட்டில் இருந்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டு கதவை உடைத்துள்ளனர்.

வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீனாக்ஷி ஐயர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் மகன் வெங்கடேஷ் ஐயர் உடலில் எந்தவித காயமும் இன்றி இறந்து கிடந்தார். வெங்கடேஷ் ஐயரின் லேப்டாப்பில் சில தகவல்  இருந்தது.‌ இருவரது உடல்களையும் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்பார்ட்மென்ட்டில் இருந்தோர் தாய் மற்றும் மகன் இருவரையும் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் 4 நாட்களாக பார்க்கவில்லை என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது மும்பை நகரின் மிரா சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை உரிமையாளர் காலி செய்ய சொன்ன நிலையில் தாயை கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.