10 வயது சிறுமி முதல் 80 வயது கிழவி வரை..! இதுவரை 40 பெண்கள் கற்பழிப்பு! ஒரு நாட்டையே பதற வைக்கும் இளைஞன்!

கடந்த 4 ஆண்டுகளாக 10 வயது முதல் 80 வயது வரையிலான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது நைஜீரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாக நைஜீரியா நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரு மனதில் கையெழுத்திட்டுள்ளனர். அதுமட்டுமின்றி "We are tired" என்ற #டேகை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள டங்கோரா நகை தாய் ஒருவர் தன் மகளின் அறைக்குள் நுழையும்போது, மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அந்த தாயார் ஒருவகையாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை கைது செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல்நிலையத்தில் அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது கைது செய்யப்பட்ட நபர் தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்து வந்துள்ளவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 

10 முதல் 80 வயதான 40-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த 4 ஆண்டுகளாக அவர்களுடைய வீட்டிற்குள்ளேயே நுழைந்து கற்பழித்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தியானது பன்னாட்டு ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.