நான் உயிரோடு இருக்கும்வரை குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படுத்த விடமாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார்.
குடியுரிமை சட்டத் திருத்தம்! நான் உயிரோடு இருக்கும் வரை செயல்படுத்த விடமாட்டேன் - மம்தா பானர்ஜி திட்டவட்டம் !

கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிமை சட்டத்திருத்த மசோதாவை நடுவன் அரசு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது இதனை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களிலும் பெரிய போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மேற்கு வங்கத்திலும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அக்கட்சி சார்பாக இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அனுதினமும் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில் மம்தா பானர்ஜி தற்போது வெளியிட்டுள்ள தகவலானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அதாவது தான் உயிரோடு இருக்கும் வரை குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த விடமாட்டேன் என்று அவர் உறுதியளித்திருக்கிறார்.
நைஹாட்டி என்ற இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற போது மம்தா பானர்ஜி "நான் இறந்தாலும் நடுவன் அரசு கொண்டுவந்த இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டேன் என்றும் மத்திய அரசின் தடுப்பு முகாம்களையும் அமைக்க விடமாட்டேன் என்றும் உறுதியளித்திருக்கிறார். இதற்காக என் உயிரையும் கொடுப்பதற்கு தயார் " என்றும் மம்தா பானர்ஜி அதிரடியாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.