ஆமாம் எனக்கு குடிப்பழக்கம் உள்ளது..! ஆனால்..! 28 வயது நடிகை வெளியிட்ட செம சீக்ரெட்!

கெட்டியோலானு என்டே மலாக்கா என்ற திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகை வீண நந்தகுமார் பீர் மீதான தனது அன்பை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.


நடிகர் ஆசிப் அலி நடித்த கெட்டியோலானு என்டே மலாக்காவில் ரின்சி என்ற கதாபாத்திரத்தில் மலையாள நடிகை வீனா நந்தகுமார் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இந்த திரைப்படத்தின் மூலம் உருவானது என்று கூறினால் அது மிகையாகாது.

சமீபத்தில் நடிகை வீனா நந்தகுமார் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது தன்னுடைய பழக்க வழக்கங்களைப் பற்றியும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பல தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்படியாக அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது பீர் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

அப்போது பேசிய வீனா , பீர் மீதான என் அன்பைப் பற்றி கூறுவதற்கு நான் ஒருபோதும் வெட்கப்படவில்லை. இந்த பழக்கத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என அதிரடியாக கூறினார். மேலும் பீர் மீதான என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை கூறுவதற்கு நான் ஏன் பயப்பட வேண்டும் எனவும் கூறினார். இது ஒரு குற்றமா? எனவும் அவர் தொகுப்பாளரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய வீணா நந்தகுமார், பீர் குடிக்கும் போதெல்லாம் தனக்கு அதிக போதை ஏற்படும் எனவும் போதையில் தான் அதிகம் பேசுவேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. நடிகை வீனாவின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்று பார்த்து அவரது ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.