குழந்தை இல்லாமல் 14 ஆண்டுகள் தவித்த தவிப்பு! பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

திருவனந்தபுரம்: 14 ஆண்டு போராட்டத்திற்குப் பின் குழந்தை பிறந்ததால், குஞ்சக்கோ போபன் தம்பதியினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கேரளாவைச் சேர்ந்தவர் குஞ்சக்கோ போபன். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகர் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவரது சொந்த வாழ்க்கை மிகவும் துயரம் நிறைந்ததாகும். ஆம், ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள குஞ்சக்கோ போபனுக்கும், பிரியாவுக்கும்  இடையே 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

ஆனால், திருமணம் நடந்த நாள் முதலாக, எந்த இடத்திற்கு சென்றாலும், குழந்தை இருக்கா, இல்லையா என்ற கேள்வியை கேட்டு கேட்டு,  அவர்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டனர். 

நட்சத்திர தம்பதி என்பதால், குழந்தை இல்லாததை பெரிய குறையாக வைத்து, பலவித விமர்சனங்களை பலரும் முன்வைக்க தொடங்கியதால், குஞ்சக்கோவும், அவரது மனைவியும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கும் நிலைக்கு ஆளாகினர். திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை எனில், அதனை பெரிய குறையாக பார்க்கும் இந்த கேடுகெட்ட சமூகம் மீது கடும் அதிருப்தி அடைந்த அவர்கள், அதிகளவில் தனிமையில் வாடி வந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின், அவர்களுக்கு கடந்த ஆண்டில், குஞ்சக்கோ மனைவி கர்ப்பமடைந்தார்.  இதையடுத்து, மகிழ்ச்சியடைந்த கணவனும், மனைவியும் பெரும் எதிர்பார்ப்புடன், நாட்களை கழிக்க தொடங்கினர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி அழகான பெண் குழந்தை அவர்களுக்குப் பிறந்துள்ளது. இஷா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தைக்கு, சென்ற சனிக்கிழமை ஞானஸ்நானம் செய்விக்கும் நிகழ்வு நடந்தது. இதுபற்றி ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள குஞ்சக்கோ போபன், குழந்தை இல்லாத குறை ஒருவழியாக தீர்ந்துவிட்டதாகவும், பெரும் மகிழ்ச்சியில் திளைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.