கிடுகிடுவென எடை குறைந்த பிரபல நடிகையின் கணவர்..! ஒரே மாதத்தில் ஆளே மாறிப்போன பரிதாபம்! அதிர்ச்சி காரணம்!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில் புதிய திரைப்படத்திற்காக சுமார் 10 கிலோ எடையை அதிரடியாகக் குறைத்திருக்கிறார். தற்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ், மலையாளம் என பலமொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் நடிகை நஸ்ரியா நசீமின் கணவர். இவர் தற்போது மலையாளத்தில் மாலிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் பஹத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் நடிப்பதற்காக அவர் தன்னுடைய உடலில் இருந்து சுமார் 10 கிலோ எடையை குறைத்து உள்ளார்.

தற்போது உடல் எடையை குறைத்த பஹத் பாசிலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் ஃபகத் பாசில் இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பஹத் பாசில் பல கதாபாத்திரங்களில் தோன்றுவார் என்றும் திரைப்பட குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பிஸியாக நடைபெற்று வருகிறது . இதுவரை இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து இந்த படக்குழுவினர் திருவனந்தபுரத்திலும் லட்சத்தீவிலும் படமாக்க முடிவு செய்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன், திலீஷ் போதன், வினய் ஃபோர்ட், இந்திரன்ஸ், சுதி கோப்பா, சந்தூநாத் மற்றும் ஜலஜா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . இந்த புகைப்படங்களில் முகத்தில் எப்போதும் இருப்பதை விட மிகவும் மெலிந்து ஒல்லியாக காணப்படுவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.