சுதந்திரப் போராட்டம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் மகாத்மா காந்தி தான்.
மகாத்மா காந்தியும், சுதந்திர போராட்ட களமும்-ஒரு பார்வை!

ஏனெனில் மற்ற தலைவர்கள் அனைவரும் மிகப் பெரிய வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திரத்தைப் பெற வேண்டும் என நினைத்தனர். ஆனால் மகாத்மா காந்தி மட்டும்தான் அகிம்சை வழியில் அறப்போராட்டத்தை நடத்தி நம் நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மாமனிதர் ஆவார்.
மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என அன்பாக அழைக்கப்படுகிறார்.
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் இடத்தில் உத்தம்சிங் காந்தி அவர்களுக்கும் புத்திலிபாய் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.
தன்னுடைய 18 ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார்.
இதற்குப்பின் பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார் அதற்குப் பின்பு தென்னாப்பிரிக்காவில் தன் அண்ணன் உதவியுடன் வேலை பார்த்தார்.
பின்னர் அவருடைய ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அவர் மீண்டும் இந்தியா திரும்பும் சூழ்நிலை உருவானது. அந்தச் சமயம் இங்கு பல வழிகளில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனை பார்த்த மாத்மா காந்தி ஒரு புதிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று எண்ணினார்.
அப்படி அவர் கொண்டுவந்த போராட்டம்தான் அறவழி போராட்டம். கத்தியின்றி ரத்தமின்றி அவர் நடத்திய அந்த போராட்டத்தின் மூலம் தான் நம்முடைய தாய் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது.
அகிம்சை , ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் முக்கிய பண்புகளாக கூறப்பட்டது .
இத்தகைய அகிம்சை வழியில் நமக்கு சுதந்திரம் நாட்டுடைய சுதந்திரத்தை கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பெற்றுத்தந்தார் நம்முடைய இந்திய நாட்டின் தந்தை மகாத்மா காந்தி.
மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் டெல்லியில் உள்ள பிர்லா மாளிகை தோட்டத்தில் நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இத்தகைய பண்புடைய மகாத்மா காந்தி மறைந்தாலும் அவர் நம் தாய் நாட்டிற்காக சிந்திய ரத்தத்தை எவராலும் மறக்கமுடியாது.