ஆண் பிரபலத்திற்கு மேடையிலேயே ஓங்கி ஒரு அறை! டிவி நடிகையால் பரபரப்பான ரியாலிட்டி ஷோ!

மாதுரிமா துலி மற்றும் விஷால் ஆதித்யா ஆகிய இருவரும் " நாச் பாலியே 9 " எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


இந்த போட்டியின் பங்கேற்பாளர் ஆக இருந்தபோது மாதுரிக்கும் விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளை மாதுரிமா தற்போது வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மாதுரிமா தன்னுடைய அனுபவங்களைப் பற்றி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

மாதுரிமா பேசுகையில் ,இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே எங்கள் இருவருக்கும் பல வாதங்கள் ஏற்பட்டன. இதன் உச்சகட்டமாக மாதுரிமா ஒரு நாள் தன்னுடைய நிதானத்தை இழந்து விஷாலை கன்னத்தில் அறைந்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. பிரபலங்கள் மத்தியிலும் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைப்பற்றி அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் மாதிரி ஏன் விஷாலை அடைந்தார் என்பதை பற்றி மனம் திறந்தார். 

விஷாலை அறைந்ததைப் பற்றி, மதுரிமா பேசுகையில் , "அவர் என்னைத் தள்ளியபோது நான் அவரை அறைந்தேன், என்னைத் தள்ள அவருக்கு உரிமை இல்லை. அவரது ஆக்ரோஷத்தை என்னால் தாங்க முடியவில்லை, மேலும் அதனை என்னால் எதிர் கொள்ள முடியாததால் தான் அவ்வாறு செய்தேன் என்று கூறினார். 

மதுரிமா மேலும் கூறுகையில், "நிகழ்ச்சியில் அவருடன் ஒற்றுமையாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்தேன். நான் என் பொறுமையை இறுதியில் இழந்துவிட்டேன். அவரின் அணுகுமுறையை என்னால் இனி பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் பொறுமையை இழந்து வெடித்தேன். நிகழ்ச்சியில் நடந்த அனைத்திற்கும் பிறகு நான் பங்கேற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, நான் மாட்டேன். இதனால்தான் அந்த நிகழ்ச்சியை விட்டு நான் வெளியேறினேன் என்று கூறினார்.